தஞ்சை: தஞ்சை மாவட்டம் பகுதியில் போதை பொருள் விற்பனையை தடுக்கும் வண்ணம் அதனை விற்கும் மொத்த வியாபாரிகள் யார்யார் என்று அவர்களை இனம் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என
தஞ்சை சரக டி.ஐ.ஜி திரு.பர்வேஷ் குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவுபடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் ஐ.பி.எஸ் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வாளர் திரு.மணிவேல் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் குமார்
,சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.மோகன், திரு.கந்தசாமி தலைமை காவலர் திரு.இளையராஜா மற்றும் காவலர்கள் திரு.நவீன்குமார், திருமதி.அருண்மொழிஅழகு, ஆகியோர் அடங்கிய தஞ்சை சரக தனிப்படை போலீசார் தஞ்சை மாவட்ட பகுதிகளுக்கு கஞ்சா எங்கிருந்து வருகிறது அதனை சப்ளை செய்பவர்கள் யார் யார் என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகிலுள்ள பாடகிரி கிராமத்தில் இருந்து கஞ்ச கடத்தப் பட்டு தமிழகத்திற்கு வருவதாக தஞ்சை சரக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து கஞ்ச விற்பனை செய்து வரும் கும்பலை கைது செய்ய தஞ்சை சரக தனிப்படை போலீசார்கள் விசாகப்பட்டிணம் விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த வட மாநிலத்தை செர்ந்த ஆறு நபர்களையும் தமிழகத்தை சேர்ந்த அவர்களின் கூட்டாளிகள் மூன்று பேர்களையும் (ஒன்பது நபர்கள்) தஞ்சை சரக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து தஞ்சைக்கு அழைத்து வந்தார்கள்.
மேலும் அவர்கள் வைத்திருந்த ஆந்திர மாநில பதிவு AP.31-AQ-9506 — AP-05-BC-4646 என்ற எண்களுடைய இரண்டு கார்களையும் சுமார் 120- கிலோ கஞ்சாவையும் கைப்பற்றி அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்