கோவை: சரவணம்பட்டி ரோட்டில் துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார்,
அவரிடம் 250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டார்,விசாரணையில் அந்த வாலிபர் வெள்ளக்கிணறு ஹட்கோ காலனியை சேர்ந்த ஆவுடையப்பன் | மகன் மந்திரமூர்த்தி ( வயது 20 ) என்பது தெரியவந்தது இவர் சரவணம்பட்டி பக்கம் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் 3 – ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இதைப்போல துடியலூர் பக்கம் உள்ள ராக்கியபாளையம் பிரிவில் ஒரு சிக்கன் கடை அருகே சோதனை நடத்தியபோது கஞ்சா கடத்தி வந்த மதுரை நல்லூரை சேர்ந்த விக்னேஷ் (வயது 18 ) ராக்கி பாளையம் நேருநகர் சேர்ந்த பாலமுருகன் ( வயது 20 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்,
இவர்களிடமிருந்து 1100 கிராம் கஞ்சா கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேட்டுப்பாளையம் போலீசார் அங்குள்ள காமராஜ் நகரில் நட த்திய சோதனையில் பைக்கில் கஞ்சா கடத்தி வந்த, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள்மேட்டுப்பாளையம் காட்டூரைசேர்ந்த சன்னத் (வய 21) மகாதேவபுரத்தை சேர்ந்த ஜெகதீஸ் (வயது 20) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து, 100 கிராம் கஞ்சாவும் , பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.