சென்னை: ஆந்திராவில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை – கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் உள்ள சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவலர்களை கண்டு நிற்காமல் இருவர் வேகமாக செல்வதை கண்டு அவர்களை மடக்கி பிடித்து சோதனையிட்ட போது, அவர்களது பையில் கஞ்சா இருப்பது உறுதியானதையடுத்து செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணுகுமார் (25). ஜெகதீஷ் (28). என்பது தெரிய வந்தது. ஆந்திராவில் இருந்து பேருந்தில் 18 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும், சிறுசிறு பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு