தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப, அவர்கள் காடல்குடி பூதாலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை இட்டமொழி ரோடு பகுதியை சேர்ந்த,டேனி செல்வன், சாத்தான்குளம் தஞ்சை நகரம் பகுதியை சேர்ந்த தாவீது, மற்றும் தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர், ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில், கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 4 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.