திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வி.D.V.கிரண்சுருதி,இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் திரு.R.S.பார்த்தசாரதி அவர்களின் தலைமையில்,
தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.சத்தியாநந்தன் மற்றும் தனிப்படை காவலர்கள், இணைந்து திருவண்ணாமலை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமுத்திரம் காலணியில் சோதனை செய்தபோது, கலைவாணி என்பவரது வீட்டினிடம், கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த கலைவாணி (52), நீலம்பாரி (23) இவர்களிடமிருந்து 400 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் தனிப்படை காவலர்கள் தேனிமலையில் நடத்திய மற்றுமொரு சோதனையில்திவாகர் வ/20 த/பெ ரவி, தென்னை மரத்தெரு, தேனிமலை என்பவரிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டு, திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.