சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” –ன் தொடர்ச்சியாக, H1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 26.06.2021 அன்று வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகரிலுள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது,
அங்கு சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 1.கார்த்திக், (வ/24), பழைய வண்ணாரப்பேட்டை, 2.நாகராஜன், (வ/27), பழைய வண்ணாரப்பேட்டை, 3.விக்னேஷ் ( எ ) தாவித், (வ/23), பழைய வண்ணாரப்பேட்டை, 4.கலை (எ) கலையரசன், (வ/29), பழைய வண்ணாரப்பேட்டை, 5.மணிகண்டன் (எ) பூச்சி மணிகண்டன், (வ/32), பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய 5 நபர்களை கைது செய்து,
அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கொண்ட கஞ்சா, 150 எண்ணிக்கையிலான Nitravet என்ற போதை மாத்திரைகள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ ஆகியவற்றை கைப்பற்றுதல் செய்து அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.