திண்டுக்கல் : திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஹரிகரன் கொரானாக் காலத்தில் 100க்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். மனதில் தோன்றும் சிறிய பொறியையும் கொரோனா சிந்தனையாக்கி வண்ணமாக உருவாக்கி தருவதில், இவருக்கு நிகர் இவரே தான்.
இந்த இளைஞரின் திறமைகளைப் பற்றி, தெற்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அபுதல்ஹாரிடம் எடுத்துக் கூறினார்
இதையடுத்துஇளைஞர் ஹரிகரன் உடனடியாக நேரில் அழைத்து, திண்டுக்கல் நகர் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் திரு.இளஞ்செழியன் தலைமையில் கொரானா விழிப்புணர்வு தொடர்பான ஓவியம் வரைய வாய்ப்பு வழங்கப்பட்டது.
துள்ளியமாக வல்லியமாக இவர் வரைந்த ஓவியங்களை பார்த்து போலீசார் பரவசமடைந்து பாராட்டினர். இளைஞருக்கு எஸ்.ஐ.திரு.அபுதல்ஹா, இளம் ஓவியர் விருது வழங்கி கௌரவித்தாா்.