திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று(24.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப. அவர்கள் தலைமையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் நல வாரியம் அமைப்பது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அரசிடமிருந்து தலைமை அலுவலகம் மூலமாக மாவட்ட அளவில் தற்காலிக கமிட்டி அமைத்து கருத்துரு கோரப்பட்டதற்கு இணங்க, காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளபட்டது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சுப்புராஜு(தலைமையிடம்),மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிசில், மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் திருமதி.தனலட்சுமி, நிர்வாக அலுவலர்(பொது) திருமதி. தரணி, கண்காணிப்பாளர் திருமதி.கிறிஸ்து ராணி மற்றும் ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சங்கர நாராயணன், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் திரு.சேகர் ஆகியோர் இக்கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.