கடலூர் : கடலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெற்ற காவலர்கள் கவுரவிக்கும் வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.மேலும் காவல்துறையில் ஓய்வு பெற்ற காவல்துறையினர் பணிக்கொடை, விடுப்பு ஊதியம், சிறப்பு சேம நல நிதி, குடும்ப சேம நல நிதி ஆகிய பண பயன்கள் இனிமேல் ஓய்வுபெற்ற முதல் வாரத்திலே கிடைக்க வேண்டும் காவல்துறை அமைச்சு பணியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்தின் பேரில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வுபெற்ற 32 காவல்துறையினர்க்கு அனைத்து பண பயன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இந்த நடவடிக்கையை ஓய்வுபெற்ற காவல்துறையினர் பாராட்டி மகிழ்ந்தனர்.