நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய திரு .குப்புராஜ் அவர்கள் இன்று (30.11.19) பணிநிறைவு செய்வதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப.,அவர்கள் பணிநிறைவு பெறும் சிறப்பு உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.
அலுவலக கூட்ட அரங்கில் பணிநிறைவு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்து கடந்த 34க்கு ஆண்டுகளாக காவல் துறையில் நேர்மையாகவும், கடமை தவறாமல் பணியாற்றி, காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார் எனவும், இவரை போன்று மற்ற காவலர்களும் சிறப்பாக செயலற்ற வேண்டும் என்றும், பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியின் போது செய்த மகத்தான நிகழ்வுகளை நினைவு கூர்ந்து வெகுவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
பின்னர் இதுவரை காவல்துறைக்காக அதிக நேரம் செலவிட்ட நீங்கள் இனி வருங்காலங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றும், மேலும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை ஒரே சீராக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், தொடந்து உங்களின் பங்களிப்பு நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறைக்கு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள்.
பின்னர் பேசிய மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் திருமதி.G.மகலெட்சுமி அவர்கள் தன் பணியின் போது மிக நேர்மையுடன் நடந்து கொண்டார்கள் எனவும், மிகவும் அசாதாரண சூழல்களில் நிலமை அறிந்து மிகவும் சாதுரியமாக நடந்து கொண்டார்கள் எனவும், மிகவும் மனிதநேயத்தோடு செயல்பட கூடிய நபர் எனவும், பாராட்டினார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் திருமதி புவனேஸ்வரி அவர்கள் பேசிய போது சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள் கொடுத்த பணியினைத் மிகவும் திறம்பட செய்ய கூடியவர் எனவும் மிகவும் நேர்மையாக பணியாற்றினார் என பாராட்டினார்கள் இந்த நிகழ்வில் மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர், உதவி ஆய்வாளர்கள் , காவல் ஆளிநர்கள் ,அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.பிரகாஷ்