இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் திரு. சிவாஜி (நெடுஞ்சாலை ரோந்து – 03), சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ரேணுகோபால் ( சிப்காட் காவல் நிலையம்) ஆகிய இருவரும் சிறப்பாக பணிபுரிந்து இன்றுடன் (30.06.2025) பணி மூப்பு அடைந்து ஓய்வு பெறுகின்றனர். பணி ஓய்வு பெறும் இருவருக்கும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கி பணி நிறைவு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC) அவர்கள் உடன் இருந்தார்.