திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 34 வருடங்கள் பணி புரிந்து ஓய்வு பெற்ற பாப்பாக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவதானு அவர்களுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில், வைத்து சிறப்பான முறையில் பணியாற்றியதை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி, பொன்னாடை அணிவித்து கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். உதவி ஆய்வாளர் திரு. சிவதானு அவர்கள் பணியில் சேர்ந்து 34 வருடங்களில், சிறப்பாக பணிபுரிந்ததற்காக இதுவரை 60க்கும் மேற்பட்ட வெகுமதிகள் பெற்றுள்ளார்.
பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், உள்ள பொதுமக்களிடம் சி.சி.டி.வி கேமரா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாப்பாக்குடி பகுதியை சுற்றியுள்ள இடங்களில் இதுவரை 30 சி.சி.டி.வி கேமராக்கள் அமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தும், பாப்பாக்குடி பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்தி சென்ற வழக்கில் 36 மணி நேரத்திற்குள் குழந்தை கடத்தலில், ஈடுபட்ட நபர்களை கைது செய்த வழக்கில் உதவியாக இருந்துள்ளார். மேலும் பாப்பாக்குடி காவல் நிலையத்தில் பணி புரிவதற்கு முன்பு வி.கே.புரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது சி.சி.டி.வி கேமரா அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வி.கே.புரம் பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் வைப்பதற்கு காரணமாக இருந்துள்ளார். மேலும் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளன்று கூட சி.சி.டி.வி கேமரா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து பாப்பாகுடி பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பான பணி மேற்கொண்டு ஓய்வு பெற்றுள்ளார்.