சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பாகல்பட்டி ஊராட்சி செங்கனூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ஸ்ரீதர்(26), இவர் தனது நண்பர்களுடன் கடந்த டிசம்பர் 31ம் தேதி புத்தாண்டு கொண்டாடிய கொண்டிருந்த பொழுது அவர் தரப்பினருக்கும் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் காரணமாக கை களைப்பு ஏற்பட்டது. இதில் ஸ்ரீதர் ஒருசிலரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைதொடர்ந்து ஸ்ரீதர் கொலை வழக்கு சம்பந்தமாக ஓமலூர் போலீசார் முதல் கட்டமாக விக்ரம் மற்றும் மோகன்குமார், ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 8பேரை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.