சிவகங்கை : சிவகங்கை காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகமாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து (20.03.2023),ம் தேதி காலை 11.00 மணிக்கு காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் Dr.R.ஸ்டாலின்,I.P.S., அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஆட்டோ ஓட்டுனர்களிடம் குறைகள் கேட்டயறிப்பட்டது. மேலும் காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா சம்மந்தமாக அதிகமாக கட்டண வசூல் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அப்போது ஆட்டோ ஓட்டுனர்கள் தாங்கள் கட்டணம் அதிகமாக வசூல் செய்வதில்லை எனவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆட்டோ ஓட்டுனர்களின் குறைகள் பரிசீலனைசெய்து நிவர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி