சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டத்தில் உள்ள மானாமதுரை டவுன் காவல் நிலையத்திற்கு எல்லைக்கும் உட்பட்ட மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மர்மமான பை ஒன்று கிடந்துள்ளது. அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர் விஜய்குமார் மற்றும் அவருடன் பயணித்த நாகராஜ் இருவரும் அந்த பையை பிடித்து பார்த்ததில் 2 லட்சம் மதிப்புள்ள கேமரா இருப்பது தெரிய வந்தது உடனடியாக அந்த கேமராவை மானாமதுரை டவுன் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் மரியாதைக்குரிய டாரிக்குள் அமீன் அவர்களிடம் மற்றும் ஏனைய காவல் ஆளுநர்கள் அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வை சார்பு ஆய்வாளர் மரியாதைக்குரிய தாரிக்கள் அமீன் மற்றும் காவல் ஆளுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர் மரியாதைக்குரிய விஜயகுமார் மற்றும் அவருடன் பயணித்த மரியாதைக்குரிய நாகராஜன் ஆக இருவரையும் மிக மட்டற்ற மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி