சிவகங்கை : (26.5.2023) ஆம் தேதி காலை தேவகோட்டை அருகில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் மனைவி திருமதி.வள்ளி மயில் (40) என்பவர் தனது மகன் படிப்பு செலவுக்காக கல்லூரியின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக ரூபாய் 60 ஆயிரத்தை அவரது மணிபர்சில் போட்டு இருசக்கர வாகனத்தில் முன்னால மாட்டிக் கொண்டு சென்ற போது தேவகோட்டை இன்பன்ட் ஜீசஸ் ஸ்கூலுக்கும் ஆவாரம் காட்டுக்கு இடையில் மணி பர்ஸ் தவறி விழுந்து விட்டது. அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் பர்சில் ஏதோ இருப்பதை அறிந்து எடுத்து திறந்து பார்த்தபோது அதில் பணம் இருந்தது. அதைக் கொண்டு வந்து நகர காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தார. ஆய்வாளர் சரவணன் பர்சில் இருந்த முகவரியை ஆராய்ந்து அதில் இருந்த ரூபாய் 62,430/- ஐ அதன் உரிமையாளர் வள்ளி மயிலை காவல் நிலையம் வரவழைத்து ஆட்டோ ஓட்டுனர் முன்னிலையில் ஒப்படைத்தார். ஆட்டோ ஓட்டுனர் கண்ணனின் நேர்மையை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்து வழி அனுப்பி வைத்தார். உடன் தேவகோட்டை நகர காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு. அன்சாரி உசேன், அவர்கள் மற்றும் திரு.நமச்சிவாயம் அவர்கள், உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி