பெரம்பலூர்: பெரம்பலூர் நகரிலுள்ள JK திருமண மண்டபத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்களின் தலைமையில் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கோபிநாத் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களை ஒருங்கிணைத்து பெரம்பலூர் நகரில் ஆட்டோ இயக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சமூக இடைவெளியுடன் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஆட்டோவில் குறைந்தபட்ச பயணிகளை மட்டுமே ஏற்றிக் கொண்டு பயணம் செய்ய வேண்டும் எனவும் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் ஓட்டுநர்கள் முககவசம் மற்றும் கையுறை அணிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.