சென்னை : இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கு இயந்திரக் காரணிகளைவிட மனிதக் காரணிகளே குறிப்பிடத் தகுந்த அளவுக்குப் பங்களிக்கின்றன. கூடுதல் வேகம், போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க மறுத்தல், கவனக்குறைவாக வண்டியோட்டுதல் ஆகியவையே விபத்துக்கான முக்கியக் காரணங்கள்.
குறிப்பாக வணிக வாகனங்களை நெடுஞ்சாலையில் ஓட்டும் ஓட்டுநர்கள் மத்தியில், குடித்துவிட்டு வண்டியோட்டுவதே சாலைப் போக்குவரத்து விபத்துக்களுக்கு மாபெரும் காரணமாக விளங்குகிறது. ஓட்டுநர்களின் அசதியும் தூக்கமும் விபத்துக்களுக்கு வழிகோலுகின்றன. கைப்பேசியைப் பயன்படுத்தாதவரை விட, பயன்படுத்தும் ஓட்டுநர்கள் ஏறத்தாழ நான்கு மடங்கு விபத்துகளை ஏற்படுத்தும் சாத்தியக் கூறு உள்ளது.
அதனை கருத்தில் கொண்டு, சாலை விபத்து குறித்து ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட, T12 பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் திருமதி. கௌசல்யா அவர்கள் கனரக வாகன ஓட்டுநர்கள் அனைவரையும், ஒன்றிணைத்து சாலை விபத்துக்கள் எவ்வாறாக ஏற்படுகின்றன பற்றியும், அதை ஏற்படாமல் வண்ணம் பார்த்து கொள்ளும் படியும், அறிவுரை கூறி, சாலையில் எவ்வாறாக ஓட்ட வேண்டும் என்று விளக்கம் அளித்து, அவர்களுக்கு உணவளித்து உறுதிமொழி ஏற்றார். அவர்களுடன் பூந்தமல்லி போக்குவரத்து ஆய்வாளர் திரு.ரமேஷ் உடனிருந்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை