கோவை : கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், கொடுத்தது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளது கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இவ்வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நமது குடியுரிமை நிருபர்
![](https://34.68.197.11/wp-content/uploads/gokul.png)
A. கோகுல்