கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜீவா நகர் பகுதியில் ஒட்டி உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஓடை அருகே மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் நகர போலீசார் எலும்பு கூட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எலும்புக்கூடு அப்பகுதியில் பல மாதங்களாக கிடந்துள்ளது என விசாரணையில் தெரியவந்தது. தடவியல் துறை காவல்துறையினர் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்