கிருஷ்ணகிரி : ஓசூர் மாநகராட்சியின் காமராஜ் காலனியில், அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் 1300 பேர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்ட பிறகு மீண்டும் 2 மணி அளவில் பள்ளி அறைக்குள் சென்றதாகவும், சற்றுநேரம் கழித்து நடுநிலைப் பள்ளியின் 6-வது மற்றும் 7-வது அறையில் உள்ள மாணவர்களுக்கு திடீரென்று விஷவாய்வு தாக்கி கண் பார்வை மங்கலாகவும் ஒரு சில மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டும் ,சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அடுத்தடுத்து ஒருவருக்கு பின் ஒருவர் மயங்கிய நிலையில் கீழே விழ தொடங்கியதும் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளியின் ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தகவல் அளித்து ஆம்புலன்ஸ் வரவைத்து அதன் மூலமாக பள்ளி மாணவர்களை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த நகர காவல் துறையினர், இது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும் மற்றும் உறவினர்களும் மாணவர்களுக்கு என்ன ஆயிற்று என்று பதறி அடித்து ஓசூர் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் பரபரப்பாக நிலவவருகிறது. தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஜயச்சந்திர பானு ரெட்டி, மற்றும் மற்றும் ஓசூர் திரு.அரவிந்த் ASP 67 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.ஒரு மாணவர் மட்டும் கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தகவல் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்