மயிலாடுதுறை: மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு சார்பில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டத்தினை (23.6.24)ம் தேதி காலை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K. மீனா அவர்கள் துவங்கி வைத்தார். இதில் ஆண்கள் பிரிவில் மாரத்தான் ஓட்டம் கால்டாக்சி முதல் கருவாழக்கரை அழகு ஜோதி அகாடமி வரையிலும், பெண்கள் பிரிவில் மணக்குடி காளியம்மன் கோவில் முதல் அழகு ஜோதி அகாடமி வரையிலும் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள், மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு வெற்றிக் கோப்பை, பதக்கம், மற்றும் சான்றிதழ்களும், 4 முதல் 15 இடங்களை பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழும், மேலும் மாரத்தான் ஒட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு. P. ஜெயக்குமார், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. TAJ லாமெக், ( மதுவிலக்கு அமல்பிரிவு) திரு.மனோகரன் (DCRB) திரு. பன்னீர் செல்வம் (SJ & HR), திரு. ராஜேந்திரன் (DCB), திரு. N. திருப்பதி (மயிலாடுதுறை உட்கோட்டம்) திரு. P ராஜ்குமார் (சீர்காழி உட்கோட்டம்),
ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் பங்கேற்றனர்.