கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைகளின் படி தற்போது சாலை பாதுகாப்பினை உறுதி செய்யவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை சாலைகளில் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதனை தடுக்கும் பொருட்டு காவல்துறை, போக்குவரத்து துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் குழுவாக இணைந்து தொடர்ந்து சிறப்பு வாகன சோதனைகளை மேற்கொண்டு அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கோவை மாநகரில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சாலையில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நேர்வில் வாகன ஓட்டிகள் பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், ஆகிய பகுதிகளில் பயணம் செய்யும் பொழுது எச்சரிக்கை பலகைகளின் மூலம் ஒலி எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மேற்படி இடங்களை தவிர்த்து பிற பகுதிகளில் வாகனங்களில் உள்ள ஒலிப்பான்களை தொடர்ந்து பயன்படுத்துவதை காண முடிகிறது, இதனால் நகரில் எந்நேரமும் அதிகப்படியான ஒலி மாசு ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.
சாலையில் பயணம் செய்யும் ஒவ்வொரு வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் ஒலிப்பான்களை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்கும் போது ஒலி மாசு முற்றிலுமாக குறை வாய்ப்புள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டத்தில் பொதுமக்கள் முழுமையாக தாங்களாகவே பங்கு எடுத்துக் கொள்வதன் மூலமே இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும் எனவே வாகனங்களில் ஒலிப்பான்களின் பயன்பாட்டை தவிர்த்து ஒலி மாசு ஏற்படுவதை தடுப்பதற்கான ஆலோசனைகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கோவை மாநகரில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று வெளிப்பாடுகள் வாகனங்களில் பயன்படுத்துவதை தடுப்பதற்காக வழிமுறைகள் மற்றும் வாகனங்களில் ஒலிப்பான்களின் பயன்பாட்டை தவிர்த்து ஒளி மாசு ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பொதுமக்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களின் தீமைகள் மற்றும் வாகனங்களில் ஒலிப்பான்களின் பயன்பாட்டை தவிர்த்து ஒலி மாசு ஏற்படுவதை தடுப்பது குறித்து கருத்தரங்கம் (15/7/2023) ஆம் தேதி காலை 10 மணி அளவில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக கலந்தாய்வு அரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பொது மக்களிடம் பெறப்பட்ட ஆலோசனைகள் குறித்து விரிவாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்கள் ஒலி மாசு இல்லாத கோவை மாநகரை உருவாக்க தங்களது பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்