இராமநாதபுரம்: கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு திரு.P.சுப்பிரமணியன் என்ற காவல் உதவி ஆய்வாளர் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றுள்ளார்.
அதன் பிறகு இவ்வாண்டு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுக்காவில் உள்ள சிங்கபுலியப்பட்டி கிராமம் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த காவலர் திரு.P.நாகநாதன் பாண்டி என்பவர் சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் விளையாட தகுதி பெற்று தற்போது போபாலில் பயிற்சியில் உள்ளார்.
அவரது திறமையை பாராட்டும் வகையில் அவரது தந்தை திரு.பாண்டி மற்றும் தாய் திருமதி.பஞ்சவர்ணம் ஆகியோரை அழைத்து காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.திரு.C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப அவர்கள் தமிழக காவல்துறை சார்பாக பாராட்டுக்களையும் வெகுமதியையும் வழங்கினார்கள்.