சேலம்: சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை காணப்பட்ட நிலையில் இன்று தேவை இல்லாமல் சுற்றித் திரியும் நபர்களுடைய எண்ணிக்கை குறைந்தது.
குறிப்பாக தேவை இல்லாமல் சுற்றித் திரியும் நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
.இதில் சாலையில் சுற்றும் முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரையும் நிறுத்தி, கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள், பொய்யான காரணங்களைக் கூறிக் கொண்டு சாலையில் சுற்ற வேண்டாம்,
அப்படி சுற்றுவதால் உண்மையான காரணங்களைக் கூறிக் கொண்டு செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே முழு ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.