குமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு. இரா.ஸ்டாலின் IPS அவர்கள் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடித்து தண்டனை பெற்றுத் தருவதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த ஒரே மாதத்தில் 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கடந்த 30.07.2018 ம் தேதி கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் குற்றவாளியான சைமன் காலனி பகுதியை சேர்ந்த எல்தஸ் 55.என்பவருக்கு 04.02.2025 ம் தேதி நாகர்கோவில் POCSO சிறப்பு நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதமும்,
10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கடந்த 21.05.2015 ம் தேதி கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் குற்றவாளியான மகாதானபுரம் நேதாஜி காலனியை சேர்ந்த மகன் பகவதியப்பன் 47.என்பவருக்கு 13.02.2025 ம் தேதி நாகர்கோவில் POCSO சிறப்பு நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும்,
14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கடந்த 21.02.2015 ம் தேதி புதுக்கடை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் குற்றவாளியான இனயம்புத்தன்துறை பகுதியை சேர்ந்த சுதன் 42. என்பவருக்கு 14.02.2025 ம் தேதி நாகர்கோவில் POCSO சிறப்பு நீதிமன்றத்தில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
விசாரணைக்கு உறுதுணையாக இருந்த இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள் , நீதிமன்ற காவலர்கள்,மற்றும் இவ்வழக்கின் விசாரணையை கண்காணித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர காரணமாக இருந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.