தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் இன்று ஒரே நாளில் 4 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி நடவடிக்கை, கைது செய்து சிறையிலடைத்தனர்
கடந்த 26.07.2020 அன்று கயத்தாறு ஆரோக்கிய மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சந்தானம் (46) என்பவரை கயத்தாறு காந்தாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கிலிபாண்டி (47) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கம்பால் தாக்கி கொலை செய்தனர்.
இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கிலிபாண்டி மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர். இவ்வழக்கின் எதிரியான மேற்படி சங்கிலிப்பாண்டி என்பவரையும், மேலும் கடந்த 29.07.2020 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் முருகன் (32) என்பவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கயத்தாறு காவல் ஆய்வாளர் திரு. முத்து அவர்களும்,
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 16 வயது சிறுமியிடம், தூத்துக்குடி 3 சென்ட், அந்தோனியார்புரத்தைச் சேர்ந்த முருகன் (47) என்பவர் பாலியல் வண்புணரச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி 27.07.2020 அன்று அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரி முருகனை கைது செய்தனர். இவ்வழக்கில் மேற்படி முருகன் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. வனிதா அவர்களும்,
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 8 வயது சிறுமிக்கு, ஆத்தூர் ஆவரையூரைச் சேர்ந்த ராஜன் என்ற மாகாளிராஜன் (23) என்பவர் தனது செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் 25.07.2020 அன்று அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரி ராஜன் என்ற மாகாளிராஜன் கைது செய்தனர். இவ்வழக்கில் மேற்படி ராஜன் என்ற மாகாளிராஜன் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருமதி. பிரேமா அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் 4 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் மேற்படி எதிரிகளான 1) கயத்தாறு காந்தாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கிலிபாண்டி (47), 2) கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் முருகன் (32), 3) தூத்துக்குடி 3 சென்ட், அந்தோனியார்புரத்தைச் சேர்ந்த முருகன் (47) மற்றும் 4) ஆத்தூர் ஆவரையூரைச் சேர்ந்த ராஜன் என்ற மாகாளிராஜன் (23) ஆகிய 4 எதிரிகளையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் 4 எதிரிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.