தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் கோவில்பட்டி அய்யனேரி பகுதியை சேர்ந்த மாரிமுத்து மாரியப்பன் மகன் 1) சதீஷ் (எ) கார்த்திக், நாலாட்டின்புதூர் மொட்டமலை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் 2) சிரஞ்சீவி, தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவர் நாயர் காலனி பகுதியை சேர்ந்த செட்டிபெருமாள் மகன் 3) முனீஸ்வரன் மற்றும் கோவில்பட்டி வடக்கு புதுக்கிராமம் பகுதியை சேர்ந்த சங்கரன் மகன் 4) ரவிசங்கர் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 4 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.