தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் உட்பட 118 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 03.11.2020 அன்று ஆழ்வாத்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தென்திருப்பேரை தெற்கு கோட்டூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமையாதாஸ் (52) என்பவர் அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தென்திருப்பேரை யாதவர் தெருவை சேர்ந்த முத்து மகன் மாரி (49) இவரது மகன்களான செல்வம் (23) மற்றும் இசக்கி (19) உறவினர்களான ராமசாமி கோனார் மகன் சோமு (எ) சண்முகசுந்தரம் (43), பேச்சிமுத்து மகன் கசமுத்து (66), செல்லத்துரை மகன் சுந்தர் (42) மற்றும் மாரியின் மனைவி சரஸ்வதி (50) ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான மாரி, செல்வம் மற்றும் சோமு (எ) சண்முகசுந்தரம் ஆகியோர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்களும்,
கடந்த 31.10.2020 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியில் தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த வேல்ராஜ் மகன் வாழ்வாங்கி (29) என்பவர் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி ஆரோக்கியபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் எபனேசர் பிரசாத் (எ) பிரசாத் (30), விஜயராஜ் மகன் அந்தோணி வினோத் (25), தூத்துக்குடி சிலுவைப்பட்டியை சேர்ந்த மாரிக்குமார் மகன் ஆனந்த் (27) மற்றும் தாளமுத்துநகர், தாய் நகரை சேர்ந்த பரமசிவன் மகன் காளிராஜ் (எ) கட்டக்காளி (37) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான எபனேசர் பிரசாத் (எ) பிரசாத், அந்தோணி வினோத், ஆனந்த் மற்றும் காளிராஜ் (எ) கட்டக்காளி ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் 7 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் மேற்படி எதிரிகளான 1) தென்திருப்பேரை யாதவர் தெருவை சேர்ந்த முத்து மகன் மாரி (49), 2) தென்திருப்பேரை யாதவர் தெருவை சேர்ந்த மாரி மகன் செல்வம் (23), 3) தென்திருப்பேரை யாதவர் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சோமு என்ற சண்முகசுந்தரம் (43) 4) தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் எபனேசர் பிரசாத் என்ற பிரசாத் (30) 5) அதே பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் மகன் அந்தோணி வினோத் என்ற வினோத் (26), 6) தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த மாரிக்குமார் மகன் ஆனந்த் (27) 7) தூத்துக்குடி தாய் நகரைச் சேர்ந்த பரமசிவன் மகன் காளிராஜ் என்ற கட்டகாளி (37) ஆகிய ஏழு எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட ஸ்ரீவைகுண்டம், காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் மற்றும் தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் திரு. அருள் ஆகியோர் 7 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் உட்பட 118 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.