அரியலூர் : அரியலூர் சந்தன ஏரியில் 04.10.2020 அன்று இயற்கை ஆர்வலர்கள், இளைஞர்கள், பனை ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ஒரு நாள் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை அரியலூர் மாவட்ட கலெக்டர் திருமதி.த.ரத்னா. இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பனை விதைகளை நட்டு, பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் பனைவிதை மற்றும் மரக்கன்றுகளை நட்டு அவற்றை முறையாக பராமரித்து பசுமையை உருவாக்க கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் திரு.சுந்தர்ராஜன், அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மதன், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள், பசுமை ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.