சேலம்: சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு. நஜ்முல் ஹோதா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சேலம் மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் திரு.N.மோகன்ராஜ் மற்றும் சேலம் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர்.
திரு. R.வேதரத்தினம் ஆகியோர்களின் மேற்பார்வையில் சேலம் மாநகர தெற்கு சரக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர் திரு.A.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் திரு.T.ரமேஷ், காவல் உதவி ஆய்வாளர் திரு. ஜான் கென்னடி , சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.சரவணன்,திரு.செல்லப்பன் மற்றும் காவலர்கள் திரு.வெங்கடேசன்,திரு.செந்தில்குமார் திரு.தங்கதுரை,திரு.சீனிவாசன் ஆகியோர்கள்.
நேற்று 29.07.2021ஆம் தேதி சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி ஊத்துக்காட்டில் உள்ள PSM லாரி ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லாரிகளை சோதனை செய்ததில்.
சுமார் ஒரு கோடி மதிப்புள்ள 7300 கிலோ எடையுள்ள 248 மூட்டைகள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது,
இதேபோல் இன்று 30.07.2021ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணி அளவில் சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கணேஷ் கல்லூரி அருகில் ஒரு சரக்கு லாரியிலிருந்து பொலிரோ வாகனத்திற்கு சரக்கு மூட்டைகளை மாற்றிக் கொண்டிருந்த போது
அவ்வழியாக ரோந்து சென்று கொண்டிருந்த சேலம் மாநகரம் வடக்கு சரக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர் திரு.S. ஆனந்தகுமார் மற்றும் அவரது ஓட்டுநர் தலைமை காவலர் திரு. முனிகுட்டி, அம்மாபேட்டை காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.நந்தகுமார் மற்றும் வாகன ஓட்டுநர் தலைமை காவலர் திரு பாண்டியன் ஆகியோர்கள் சந்தேகத்தின் பேரில் மேற்படி வாகனங்களை சோதனை செய்த பொழுது.
அதில் சுமார் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 2397 கிலோ எடையுள்ள 72 மூட்டைகள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேற்படி ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு வாகனங்களை பறிமுதல் செய்து தங்களது பணிகளை சிறப்பாக செய்த காவல்துறையினரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.