திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பெரியகடைவீதி பகுதியை சேர்ந்தவர் மீரான் பாபு 35 இவர் அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார் இதனிடையே சட்டாம்பிள்ளை தெரு பகுதியில் நடந்து வந்தார்,
அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரை வழி மறித்து அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மீரான் பாபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் போலீசார் வாலிபரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை உதவியுடன் தேடி வருகின்றனர்.
