வேலூர் : இன்று (02.12.2022) வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வேலூர் மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘ஒருங்கிணைப்பட்ட மொபைல் சிசிடிவி காவல் கட்டுப்பாட்டு அறை (Integrated Mobile CCTV Police Control Room) வாகனத்தை, வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி. சுஜாதா அவர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்கள் வேலூர் மாவட்ட காவல்துறை பயன்பாட்டிற்கு,தமிழ்நாடு காவல்துறை தலைவர்/படைத்தலைவர் முனைவர்.திரு.C.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்களிடம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு குமரவேல் பாண்டியன் அவர்கள், வேலூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். MCCC – Integrated Mobile command and Control Centre வாகனத்தின் சிறப்பு அம்சங்கள்: 1. TEMPO TRAVELLER வாகனத்தில் மொபைல் CCTV மையப்படுத்தப்பட்ட 360 டிகிரி டூம் கேமரா (Doom Camera) மற்றும் அனைத்து திசைகளிலும் நிலையான கேமரா (Static Camera) பொருத்தப்பட்டுள்ளது.
2) இந்த வாகனத்தின் கட்டுப்பாட்டு அறையும் வேலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையும் இன்டர்நெட்(Internet) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மொபைல் CCTV வாகனத்தின் தகவல்கள் அனைத்தும் வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் முதன்மை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி கண்காணிக்கப்படும் 3) இந்த மொபைல் CCTV வாகனத்தின் கேமராக்கள் மூலம் சமூக விரோதிகள், பழைய குற்றவாளிகள், மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் அடையாளம் காண முகத்தை அடையாளம் காணும் ( Face Recognition ) திறனைக் கொண்டுள்ளது. 4) இந்த மொபைல் CCTV கேமரா வாகனங்களின் பதிவெண்களை ( Vechile No) அடையாளம் காட்டும். 5) இந்த வாகனத்தில் ட்ரோன் ஸ்லாட் (Drone Slot) உள்ளது மற்றும் ட்ரோன் படங்கள், வீடியோக்களை (Drone Pictures and Videos) மொபைல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும், பின் இந்த தகவல்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள முதன்மைக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு கண்காணிக்கப்படும். 6) இந்த வாகனத்தின் நிகழ்விடத்தை அறிய GPS பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தில் இருந்து வெளியே தொடர்பு கொள்ள IP வசதியுடன் தொலைபேசி மற்றும் Walkie talkie அமைக்கப்பட்டுள்ளது. 7) திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் கூட்டத்தை கண்காணிக்கவும், கூட்டத்தினுள் சந்தேகத்திற்க்குறிய நபர்களை அடையாளம் காணவும் இந்த வாகனம் தற்போது பயன்படுத்தப்படும்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்