திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். வடசென்னை அனல் மின் நிலைய 2வது நிலையின் வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக 2021ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை எனவும், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 30000ரூபாய் வழங்கிட வேண்டும், பணி நிரந்தரம் செய்யும் வரையில் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஊதியம் வழங்காமல் மின்வாரியமே நேரடியாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு அரசு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி அடுத்தடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் ஒப்பந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு