சென்னை: கடந்த 06.01.2022 முதல் 08.01.2022 வரை, திருச்சியில் நடைபெற்ற 61வது மாநில அளவிலான காவல் துறையினருக்கான விளையாட்டு போட்டியில் சென்னை பெருநகர காவல் துறையினர் கலந்து கொண்டு 48 பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் இன்று (10.01.2022) மாலை மாநில அளவிலான காவல் துறையினருக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சென்னை பெருநகர காவல் விளையாட்டு அணியினரை நேரில் அழைத்து பாராட்டி குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர்.திரு.J.லோகநாதன், இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.B.சாமுண்டீஸ்வரி, இ.கா.ப, துணை ஆணையாளர் திரு.L.பாலஜிசரவணண், (தலைமையிடம்), திரு.சௌந்திரராஜன் (ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
