சென்னை : சென்னை டிஜிபி அலுவலக உதவி காவல்துறை தலைவராக இருந்த ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட திரு.ஓம் பிரகாஷ் மீனா,IPS நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, CBCID – SP மற்றும் இராமநாதபுரம், திருநெல்வேலியில் எஸ்.பி ஆக பணியாற்றியுள்ளார்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு.செல்வநாக ரத்தினம்,IPS சென்னை டிஜிபி அலுவலக உதவி காவல்துறை தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.