தேனி: தேனி உட்கோட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரண்மனை புதூர் சத்திரப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வேதபுரி ஆசிரமத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி திருக்கோயில் கருவறைக்கு பின்பு உள்ள கல் மண்டபத்தில்
வைத்து வழிபாடு செய்து வந்த 9 ஐம்பொன் சாமி சிலைகளை கண்ணாடி சுவரை உடைத்து திருடப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களால்
இந்த திருட்டு குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களையும் மற்றும் ஐம்பொன் சிலைகளை விரைந்து மீட்க தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.பால்சுதர், பெரியகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K. முத்துக்குமார் ஆகியோர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டன,
தனிப்படையினரின் தீவிர முயற்சியால் 24 மணி நேரத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்து அவரிடமிருந்து 9 ஐம்பொன் சிலைகளை மீட்டு, திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
திருடப்பட்ட 9 ஐம்பொன் சிலைகளை மீட்டு குற்றவாளியை விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கி தனது வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட 9 ஐம்பொன் சிலைகளை மீட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரின் பணி சிறக்க திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.B.விஜயகுமாரி,இ.கா.ப., அவர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.