திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், புலிவலம் அரசு மேல்நிலை பள்ளியில் (09.02.2024) நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri).,அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும், பள்ளிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். அப்போது சிறப்புரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு – சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது பற்றியும், இத்தகைய செயல்களால் பாதிக்கப்பட்டால் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
மேலும், போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூற, விழாவில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதனை தொடர்ந்து கூறி உறுதிமொழியை ஏற்று கொண்டனர். பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா ஆகியவற்றில் வெற்றி பெற்ற, கடந்த ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும், 100% தேர்ச்சியை கொடுத்த ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். புத்தக வாசிப்பில் அதிக ஈடுபாடு உடைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் தனது சொந்த செலவில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை புலிவலம் அரசினர் மேல்நிலை பள்ளி நூலகத்திற்கு வழங்கினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்