சென்னை: பாரத ஸ்டேட் வங்கி , ஏடிஎம் இயந்திரத்தில் பணமோசடி தொடர்பான 14 வழக்குகள் சென்னை நகரில் 15.06.2021 முதல் 18.06.2021 வரை நடந்துள்ளன. மூத்த அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் காவல் துணை ஆணையாளர், தியாகராயநகர் அவர்கள் தலைமையில் கீழ் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணையில் சில குற்றவாளிகள் வட மாநிலங்களிலிருந்து இருந்து வந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
சுமார் ரூ .45,00,000 / – வரை எடுக்கப்பட்டுள்ளது . விசாரணையின் போது சிறப்பு போது சிறப்பு குழு ஹரியானாவில் உள்ள பல்லப்கர்க் சேர்ந்த அமீர் அர்ஷ், என்பவரை ஹரியானா மாநில காவல் துறையின் உதவியுடன் 23.06.2021 அன்று கைது செய்தனர். விசாரணையின் போது கைது செய்யப்பட்ட நபர் குற்றச் சம்பவங்களை ஒப்புக் கொண்டனர்.
மேலும் குற்ற செய்முறை மற்றும் பிற குற்றவாளிகளை பற்றி தகவல் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரூ .4,50,000/ கைப்பற்றப்பட்டது. இந்த ஏடிஎம் பண மோசடியில் ஈடுபட்ட எஞ்சிய குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பு குழு ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் முகாமிட்டிருந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய வீரேந்திர ராவத், 23, அரியானா மாநிலம் என்பவரை கைது செய்து, அரியானா மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னைக்கு அழைத்து வந்து, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளார்.