சென்னை: அம்பத்தூரைச் சேர்ந்த பிரேம்ராஜ், 45, என்பவர் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
பிரேம்ராஜ் 12.09.2021 அன்று அம்பத்தூர், பட்டரைவாக்கம், இரயில்வே ஸ்டேசன் ரோட்டில் உள்ள ஏ.டி.எம் சென்டரில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை சோதனை செய்த போது, ஏ.டி.எம் இயந்திரத்தின் ஒரு பகுதி சேதமடைந்திருந்ததும், யாரோ அடையாளம் தெரியாத நபர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.
இது குறித்து பிரேம்ராஜ் T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியுடன் விசாரணை செய்து,
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ராதாகர்மாயிக், 24, ஓடிசா மாநிலம் என்பவரை கைது செய்தனர். மேற்படி நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
