காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் நகர் ஜங்ஷனில் 24 12 19ஆம் தேதி இரவு சுமார் 1.30 மணிக்கு விஜயா மற்றும் பச்சையம்மாள் ஆகிய இரு சிறுமிகள் வழி தெரியாமல் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த காஞ்சிப் தாலுகா காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. யுவராஜ் அவர்கள் மேற்படி சிறுமிகளை பார்த்து விசாரித்தபோது, வழி தெரியாமல் அலைந்து கொண்டிருப்பதாக, தெரியவந்தது.
மேற்படி தகவலை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சாமூண்டீஸ்வரி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி சிறுமிகளை விசாரித்தபோது சரியான தகவல் தெரிவிக்காததால், சிறுமியர்கள் இருவரையும் இரவு பாதுகாப்பாக தங்க வைத்தனர். 25.12.19ஆம் தேதி சிறுமியர்களை விசாரணை செய்தபோதுஇ அவர்கள் இருவரும் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் (தாய்) என்பவரிடம் இருந்ததாகவும், பின் அவர்களிடம் கோபித்துக்கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில், உள்ள இரும்பாடி கிராமத்தில் வசிக்கும் தாத்தா வீட்டுக்குச் செல்வதற்கு வந்ததாகவும், வழியில் காஞ்சிபுரம் செவிலிமேடு கிராமத்தில் உள்ள பள்ளக்கானியில் ஏற்கனவே அவர்கள் பெற்றோர்கள் மூன்று மாதத்திற்கு முன்பு வேலை செய்த சங்கர் வீட்டிற்கு சென்றதாகவும், அந்த வீட்டில் அப்போது யாரும் இல்லாததால் காஞ்சிபுரத்தில் பெரியார் நகரில் தனியாக சுற்றித்திரிந்ததாக கூறியுள்ளனர்.
பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி, சிறுமியின் தாய் மற்றும் தாத்தா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரு சிறுமிகளையும் 26.12.19 அன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேற்படி பெற்றார்கள் இருவரும் படிக்க வைக்க வசதியில்லை என்று அவர்களை தங்கி படிக்க வைக்க வசதி இல்லாததால், அவர்கள் விடுதியில் தங்கிப் படிப்பதற்கு தங்களுக்கு சம்மதம் என்றும் தெரிவித்ததன் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, மேற்படி சிறுமி விஜய் மற்றும் பச்சையம்மாள் ஆகிய இருவரையும் நல்ல முறையில் விடுதியில் தங்கிப் படிப்பதற்கு வசதி செய்து கொடுக்க,காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சாமூண்டீஸ்வரி அவர்கள் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.