இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் உத்தரவுப்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 25.03.2020-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது.
தற்போது 24.05.2021-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.இந்நிலையில், இன்று (05.06.2021) தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் என மொத்தம் 120 நபர்களுக்கு.
தன்னார்வலர்களான புதுமடத்தைச் சேர்ந்த ஜப்பார், தொண்டியைச் சேர்ந்த கோவிந்தன், அனீஷ் ரஹ்மான் மற்றும் பிஸ்மில்லாகான் ஆகியோர் உதவியுடன் அரிசி உள்பட மளிகை மற்றும் காய்கறிகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் நிவாரணமாக வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியை பரமக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.வேல்முருகன், தொண்டி காவல் ஆய்வாளர் திரு.ஆனந்தக்குமார், சார்பு ஆய்வாளர் திரு.சித்தன், தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.முருகானந்தம் மற்றும் தனிப்பிரிவு முதல்நிலைக் காவலர் திரு.துரை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.