மதுரை : மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என, யாரும் உணவு பொருட்களுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவ ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் தொடங்கிவைத்தார்.
இன்று 23.04.2020- ம் தேதி ஜெய்ஹிந்துபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் இணைந்து தன்னார்வலர்கள் உதவியுடன் 75 ஏழை குடும்பங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் அனைவருக்கும் வழங்கினார். மதுரை மாநகரில் உள்ள 22 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் இத்திட்டம் அடுத்தடுத்து விரிவுப்படுத்தப்பட்டு உதவி வருகின்றனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்