இராமநாதபுரம்: முதுகுளத்தூர் உட்கோட்ட பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவிய இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்..
கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 24.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இராமநாதபுரம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், உணவுப் பொட்டலங்களும் காவல்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று 31.05.2021-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆப்பனூர் காலணியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்,IPS., அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு
கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரிசி உள்பட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை நிவாரணமாக வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திரு.ராகவேந்திரா K ரவி, முதுகுளத்தூர் காவல் கண்காணிப்பாளர், சார்பு ஆய்வாளர் திரு.கார்த்திகைராஜா மற்றும் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.முத்துச்சாமி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்