திருநெல்வேலி: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும், ஏழை எளிய மக்களுக்கு முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் திரு.டேவிட்ராஜ், அவர்கள். மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் அரிசி மற்றும் நிவாரண பொருட்களை சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் திருமதி.சுகாதேவி, அவர்கள் இன்று வழங்கினார்கள்.
மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், முகக் கவசம் அணிந்து,சமூக இடைவெளியை கடைபிடித்து நடக்குமாறும், அரசு கூறிய விதிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறும் அறிவுரை வழங்கி பாதுகாப்பாக இருக்கும் படி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.