சேலம் : சேலம் ஓமலூர் உட்கோட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலைய பகுதியை சேர்ந்த அனிதா என்பவர் தீவட்டிப்பட்டி தாச சமுத்திரத்தில் குடியிருந்தே வருவதாகவும் (23/8/2020),ஆம் தேதி மதியம் மாதங்காடு பூசாரிப்பட்டி காடையாம்பட்டி பகுதி சேர்ந்த மோட்டர் சம்ப் ஆப்ரேட்டர் ஆக பணிபுரியும் பாலன் மகன் ஈஸ்வரன் (32) என்பவர் அனிதா வீட்டில் இல்லாத போது சிறுமியிடம் குற்றவாளி தனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்க சிறுமி வாட்டர் டேங்க் ரூமிற்கு தண்ணீர் எடுக்க சென்றபோது தன்னுடைய செல்போனில் வீடியோ கேம் போட்டு தருவதாக கூறி மோட்டார் அரைக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸ் ஆக்டிங் படி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திருமதி. துர்கா தேவி அவர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி (25/8/2020) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வழக்கில் விரைவாக ஓமலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களால் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த விசாரணையில் இருந்தது இவ்வழக்கு சாட்சிகள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு (19/4/ 2023), ஆம் தேதி மேற்கண்ட குற்றவாளி பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக போகோ நீதிமன்ற நீதிபதி திருமதி.ஜெயந்தி அவர்களால் ஏழு ஆண்டு சிறை அடைக்க உத்தரவிட்டார் மேலும் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் திருமதி சுதா அவர்கள் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்தார் தற்போதைய விசாரணை அதிகாரி ஆன திருமதி.இந்திரா ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்