கோவை: கோவை போத்தனுர் பக்கம் உள்ள வெள்ளலூர் வெள்ளபாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் .இவர் அனுமதி பெறாமல் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் ஏலச்சீட்டு போட்டிருந்தார். சீட்டு முடிவடைந்தும் அதற்கான பணம் ரூ1 லட்சத்து 67 ஆயிரத்தை ராதாகிருஷ்ணன் கொடுக்கவில்லை.
இதேபோல பலரிடம் அவர்மோசடி செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இது குறித்துபோத்தனூர் காவல் நிலையத்தில் பேச்சிமுத்து புகார் செய்துள்ளார். போலீசார்மோசடி வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்