திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், இன்று (20.03.2026) ஏலகிரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பாரதி தலைமையில், ஏலகிரி டான் போஸ்கோ கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் POCSO சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், அவசர உதவி எண்கள் மற்றும் ‘காவல் உதவி’ செயலி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. சமூகத்தில் ஏற்படும் குற்றங்களைத் தவிர்க்கும் வழிமுறைகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது காவல் ஆய்வாளர், காவல்துறையின் பணிகள், பொறுப்புகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
















