தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான குடோனிலிருந்து கடந்த 10.10.2022 அன்று ரூபாய் 4,50,000/- மதிப்பிலான 1000 ஜிப்சம் அட்டைகள் திருடு போயுள்ளது.
இதுகுறித்து அந்த ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்த சங்கரபாண்டியன் மகன் தங்க மாரியப்பன் 42. என்பவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி ஏற்றுமதி நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் மடத்தூர் நடுத்தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் பொன் செல்வம் 45. என்பவர் மேற்படி குடோனிலிருந்து
ஜிப்சம் அட்டைகளை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் வழக்கு பதிவு செய்து குற்றவாளி பொன்செல்வத்தை கைது செய்து, அவரிடமிருந்த ரூபாய் 4,50,000/- மதிப்பிலான 1000 ஜிப்சம் அட்டைகளையும் பறிமுதல் செய்தார்.