கோவை: கோவையில், சில நாட்களுக்கு முன், பீளமேடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கூலி தொழிலாளியிடம் துப்பாக்கி காட்டி மிரட்டி, பணம் பறித்த வழக்கில், சென்னையை சேர்ந்த ரவுடி ரவி (33), உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 4.55 எம்.எம்., ஏர் பிஸ்டல், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல், கருமத்தம்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, வழிப்பறி செய்வதற்காக, ஏர் பிஸ்டலுடன் சுற்றித்திரிந்த இருவரை கைது செய்தனர்; மேலும், மூவரைத் தேடி வருகின்றனர்
.இதுபோன்று, கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் ஏர் பிஸ்டல் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.போலீசார் கூறுகையில், ‘வழிப்பறி வழக்கில் கைதானவர்களிடம், ‘ஏர் பிஸ்டல்’ குறித்து கேட்டபோது, ‘ஆன்லைன்’ மூலம் வாங்கியதாகக் கூறுகின்றனர்.
இது, பெரிய பிரச்னை. இதன் உண்மை தன்மையை விசாரிக்கிறோம். ஆன்லைன் மூலம், ஏர் பிஸ்டல் வாங்கப்பட்டது உண்மையாக இருப்பின், அது போன்ற விற்பனையை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்